வகுப்பறையில் தூங்கும் அரசுக்கல்லூரி பேராசிரியை - மாணவர்கள் குற்றச்சாட்டு

சொந்த வேலைக்கு கல்லூரி வளாகத்தை விட்டு வெளியில் அனுப்புவது போன்ற செயலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு;

Update: 2025-01-28 10:07 GMT
திருச்சி மாவட்டம் துவாக்குடியில் அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் 5000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த சூழலில் பேராசிரியை பாத்திமா மரியம் என்பவர் மாணவர்களுக்கு பாடம் எடுக்காமல் வகுப்பறையில் தூங்குவதாகவும், மாணவர்களை தரக்குறைவாக பேசுவது, சொந்த வேலைக்கு கல்லூரி வளாகத்தை விட்டு வெளியில் அனுப்புவது போன்ற செயலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்கள் வகுப்புகளை புறக்கணித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இது குறித்து பேசிய மாணவிகள், பேராசிரியை பாத்திமா மரியம் இது போன்ற தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. பேராசிரியை பாத்திமா மரியத்திற்கு பதிலாக வேறொரு பேராசிரியரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Similar News