திருச்சி பீமநகர் அருகே பள்ளத்தில் சிக்கிய லாரி

பீமநகர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது;

Update: 2025-01-28 12:37 GMT
திருச்சி மாநகராட்சி, இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி மிஷன் ஆகிய மூன்று வெவ்வேறு கட்டங்களின் கீழ், 45 வார்டுகளில் பாதாள வடிகால் திட்டத்தை ஆமை வேகத்தில் செயல்படுத்தி வருகிறது. பாதாளச்சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் சரிவர செப்பனிடப்படாமல் குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக தினந்தோறும் போக்குவரத்து வரத்து நெரிசல் விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள பீமநகரில் பாதாள சாக்கடை பணியில் லாரி ஒன்று பயன்படுத்தப்பட்டு வந்தது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் பள்ளத்தில் லாரியின் இடது பக்க சக்கரங்கள் சிக்கி கொண்டது. இதனைத் தொடர்ந்து அருகே நிறுத்தி வைக்க பட்டிருந்த பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் லாரியை பணியாளர்கள் மீட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

Similar News