ஓவியப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
அரியலூர் அடுத்த அஸ்தினாபுரத்திலுள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், தேசிய பசுமைப் படை இயக்கும் சார்பில் நடைபெற்ற மாவட்ட வருவாய் அளவிலான ஓவியப் போட்டியில் வெற்ற மாணவ,மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.;
அரியலூர், ஜன. 28- அரியலூர் அடுத்த அஸ்தினாபுரத்திலுள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், தேசிய பசுமைப் படை இயக்கும் சார்பில் நடைபெற்ற மாவட்ட வருவாய் அளவிலான ஓவியப் போட்டியில் வெற்ற மாணவ,மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. வருவாய் வட்டத்திலுள்ள நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்பட்ட இந்த ஓவியப் போட்டிக்கு, மாசு கட்டுப்பாடு வாரிய செயற் பொறியாளர் கே.முரளி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் வேல்முருகன் முன்னிலை வகித்தார்.போட்டியில், 52 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சுற்றுழச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து ஓவியங்களை வரைந்தனர். இதில் வகுப்பு வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.மேலும் கலந்து கொண்டவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் மஞ்சப் பை வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் பிரீத்தி பங்கேற்று, நெகிழியை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் ம.குணபாலினி செய்திருந்தார்.