மயிலம் அருகே ஊராட்சி செயலக அலுவலகம் திறப்பு
அலுவலகத்தை திறந்து வைத்த ஒன்றிய பெருந்தலைவர்;
விழுப்புரத்தில் நடைபெற்ற புதிய திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா மயிலம் ஒன்றியம், சாலை ஊராட்சி கிராமச் செயலக புதிய கட்டிடம் மற்றும் அங்கன்வாடி மைய புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைத்ததை அடுத்து, மயிலம் ஒன்றிய பெருந்தலைவர் யோகேஸ்வரி மணிமாறன், திமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ப.சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.