மயிலத்தில் சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு
காணொளி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்;
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், விழுப்புரத்தில் நடைபெற்ற புதிய திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மயிலம் சார்பதிவாளர் அலுவலகத்தை காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.இந்நிகழ்வில் திமுக விழுப்புரம் வட மாவட்ட பொறுப்பாளர் ப.சேகர் கலந்து கொண்டார். உடன் மாவட்ட பொருளாளர் ரமணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேதுநாதன், மயிலம் தெற்கு ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.