வழக்குரைஞர் கொலை முயற்சி:இருவர் குண்டர் சட்டத்தில் கைது

வழக்குரைஞர் கொலை முயற்சி:இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.;

Update: 2025-01-29 05:12 GMT
அரியலூர்,ஜன.29- அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே வழக்குரைஞர் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய இருவர் குண்டர் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். செந்துறை அடுத்த பொன்பரப்பி, சந்தை தெருவைச் சேர்ந்தவர் கதிர்வேல் மகன் அறிவழகன்(49), ராயம்புரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகன் சிவா(32). இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 10.12.2024 அன்று இலைக்கடம்பூர் வழக்குரைஞர் ஒருவரை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டனர். புகாரின் பேரில் செந்துறை காவல் துறையினர்,   கொலை முயற்சி மற்றும் பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, மேற்கண்ட இருவரையும் கைது ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், இவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் பரிந்துரை செய்ததன் பேரில், மேற்கண்ட இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News