கோட்டகுப்பத்தில் தொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை
தொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை;
வானூா் வட்டம், பெரிய கோட்டக்குப்பம், அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த அந்தோனிசாமி மகன் சகாயராஜ் (40), தொழிலாளி. மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த இவா், மன உளைச்சலில் வீட்டில் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டக்குப்பம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].