சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரசாரம் தொடக்கி வைப்பு
சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரசாரம் தொடக்கி வைக்கப்பட்டது.;
அரியலூர்,ஜன. 29- அரியலூரில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை, மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறை, தேசிய பசுமைப் படை சுற்றுச்சூழல் மன்றம், பள்ளி கல்வித் துறை இந்த அறக்கட்டளை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பிரசாரம் புதன்கிழமை தொடக்கி வைக்கப்படது. அரியலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட வன அலுவலர் இளங்கோவன், பிரசாரத்தை தொடக்கி வைத்து பேசுகையில், சுற்றுச்சூழலை காப்பது நம் அனைவரின் கடமையாகும் நம் வாழக்கூடிய இந்த பூமியில் எதிர்கால சந்ததினரும் நலமாக வாழ வேண்டுமெனில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் . மழை நீரை சேமிக்க வேண்டும் . நெகிழிப் பயன்பாட்டை தவிர்த்து துணிப்பை உபயோகப்படுத்த பழக வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் வனத்துறை அலுவலர் முத்துமணி , மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் முரளி, முதல்வரின் சிறப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஷ் குமார், தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் குணபாலினி, பெரம்பலூர் ஒருங்கிணைப்பாளர் முகமது உசேன், பள்ளி துணை ஆய்வாளர் பழனிச்சாமி, இந்தோ அறக்கட்டளை மேலாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த கலைக்குழுவானது, அரியலூர் பேருந்து நிலையம், நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு கலைக் கல்லூரி, அரசு மேல்நிலைப் பள்ளி, வாலாஜா நகரம் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.