தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணைக்குத் தடை விதிக்க கோரி சத்துணவு ஊழியர்கள் மாநிலம் தழுவிய போராட்டம்

போராட்டம்;

Update: 2025-01-29 12:43 GMT
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு சத்துணவு மையங்களில் 3,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கி, 8,000 பேரை பணியமர்த்துவது குறித்து அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை சத்துணவு ஊழியர்களை வஞ்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கூறியுள்ளனர். எனவே, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். அனைத்து காலி பணியிடங்களிலும் பணிமூப்பு அடிப்படையில் முன்னுரிமை தந்து காலமுறையில் ஊதியத்தை உயர்த்தவும், பதவி உயர்வு வழங்கவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு மைய ஊழியர்கள், அரசுக்குப் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்

Similar News