நீதிமன்ற பணியாளர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்புத் துறையினர்

தீயணைப்பு துறை;

Update: 2025-01-29 12:47 GMT
தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் உள்ளது. இந்த நீதிமன்ற வளாகத்தில் தீ தடுப்பு செயல்முறை விளக்கம் தீயணைப்புத் துறையினரால் செய்து காண்பிக்கப்பட்டது. நீதிமன்ற பணியாளர்களுக்கு தீ தடுப்பு மற்றும் தற்காலிக பேரிடர் காலங்களில் செயல்பட வேண்டிய நடைமுறைகள் குறித்தும்,தீ பற்றி எரிந்தால் எடுக்கப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும், தீ பற்றி எரியும் கட்டுமானங்களில் இருந்து எவ்வாறு வெளியேறுவது என்பது உள்ளிட்ட பல்வேறு செயல்முறை விளக்கங்கள் தீயணைப்புத் துறையினரால் நீதிமன்ற பணியாளர்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது. இதில் நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Similar News