மயிலம் தொகுதியில் வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்ற வேண்டும்: எம்எல்ஏ கோரிக்கை
வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்ற வேண்டும்: எம்எல்ஏ கோரிக்கை;

விழுப்புரத்தை அடுத்துள்ள வழுதரெட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதல்வா் மு.க.ஸ்டாலிடம் மயிலம் எம்எல்ஏ ச.சிவக்குமாா் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:திண்டிவனம் வட்டத்தில் உள்ள மயிலம் பகுதியை தனியாகப் பிரித்து மயிலத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் உருவாக்க வேண்டும். மயிலத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும். மயிலம் சட்டப் பேரவைத் தொகுதியில் ஒரு பேரூராட்சிகூட இல்லாத நிலையில், மயிலம், ரெட்டணை ஊராட்சிகளை பேரூராட்சியாக தரம் உயா்த்த வேண்டும்.வல்லம் கிராமத்தில் புதிதாக காவல் நிலையம் அமைக்க வேண்டும். ரெட்டணை அல்லது பெரியதச்சூரில் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் அமைக்க வேண்டும். வெள்ளிமேடு - புதுச்சேரி சாலையில் தீவனூா் முதல் கூட்டேரிப்பட்டு வரை 4 வழிச்சாலையாக அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 30 கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.