கோபியில் கார் மோதி டெய்லர் பலி

கோபியில் கார் மோதி டெய்லர் பலி;

Update: 2025-01-30 05:25 GMT
கோபியில் கார் மோதி டெய்லர் பலி
  • whatsapp icon
கோபியில் கார் மோதி டெய்லர் பலி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த குள்ளம்பாளையம், அப்பாஜி நகரைச் சேர்ந்தவர் ரவி (62). டெய்லர். இவர் நேற்று முன்தினம் காலை கோபி-ஈரோடு மெயின்ரோட்டில் குள்ளம்பாளையம் பிரிவு என்ற இடத்தில் டூவீலரில் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது கோபியிலிருந்து ஈரோடு வந்த கார் எதிர்பாராத விதமாக டெய்லர் ரவி மீது மோதியது. பின்னர், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் கார் ரோட்டின் இடது ஓரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதனை தொடர்ந்து அதன் பக்கவாட்டில் நிறுத்தியிருந்த சரக்கு ஆட்டோ மீது மோதி கார் நின்றது. இந்த விபத்தில் ரவி படுகாயமடைந்து கோபி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர், அங்கிருந்து கோபி அரசு ஆஸ்பத்திரி செல்லும் வழியில் உயிரிழந்தார். கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த கணேஷ்(35) என்பவரிடம் விசாரித்து வருகிறார்கள்.

Similar News