தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்;

தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் சங்கம் சார்பாக சம்பள உயர்வு, பொங்கல் போனஸ் 1000 வழங்க வேண்டும், நிலுவைத்தொகை வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாநிலத் தலைவர் இ.வி.கே.சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் கோரிக்கை மனுவை வட்டார வளர்ச்சி அலுவலர் அர்த்தநாரிஸ்வரனிடம் வழங்கினர். உடன் மாவட்ட தலைவர்கள் திருப்பதி, சோமு, கண்ணன் மற்றும் தாளவாடி ஒன்றிய நிர்வாகிகள் சேவகன் கார்த்திகேயன், PPT.பழனிசாமி, ராஜண்ணா, முருகா, பாக்யராஜ், நாகேஷ், சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.