மகன்கள் கவனிக்காததால் முல்லைப் பெரியாற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை;
தேனி அருகே முல்லைப்பெரியாற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார். கம்பம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் காமாட்சியப்பன் மனைவி கண்ணம்மாள் (94). இவர் தனது மகன்களுடன் கோபித்துக் கொண்டு போடியில் உள்ள தனது பேத்தி வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில் மகன்கள் பார்க்க வராததால், மன உளைச்சலிலிருந்த அவர் வீரபாண்டியில் முல்லைப் பெரியாற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வீரபாண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.