பவானி ஆற்றில் மிதந்த இளைஞர் உடலை மீட்டு போலீசார் விசாரணை

பவானி ஆற்றில் மிதந்த இளைஞர் உடலை மீட்டு போலீசார் விசாரணை;

Update: 2025-01-30 05:41 GMT
  • whatsapp icon
பவானி ஆற்றில் மிதந்த இளைஞர் உடலை மீட்டு போலீசார் விசாரணை சிறுமுகை அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை கொலை செய்து கை, கால்களை கட்டி பவானி ஆற்றில் வீசி சென்ற 3 பேரை சிறுமுகை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பவானிசாகர் பெரிய கள்ளிப்பட்டி, சித்தன் குட்டை, கல்ரா மொக்கை என்ற இடத்தில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் இளைஞர் உடல் பவானி ஆற்றில் மிதப்பதாக பவானிசாகர் போலீசருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் இளைஞர் உடலை மீட்டனர். இது குறித்து சிறுமுகை போலீசாரிடம் கேட்ட போது இளைஞர் காணவில்லை என புகார் உள்ளதாக தெரிவித்துள்ளனர். உடனடியாக சிறுமுகை இன்ஸ்பெக்டர் நிர்மலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் இறந்தவர் சிறுமுகை பெத்திக்குட்டை, நடுவீதி பெரியூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் மகன் லோகநாதன் (24) என்றும் இவரை கடந்த 24 /01/ 2025 அன்று பெத்திக்குட்டை ஜே. ஜே நகரைச் சேர்ந்த ரங்கராஜ் மகன் சூர்யாவை (24), சிறுமுகை, அம்மன் புதூரைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் தமிழ்செல்வன் (28), அன்னூர், மூக்கனூரைச் சேர்ந்த சங்கர் மகன் மோகன்ராஜ் (28) ஆகியோர் முன் விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் அடித்து கொலை செய்து வெள்ளை மொக்கை அணை பகுதி என்ற இடத்தில் உடலில் கல்லை வைத்து கை கால்களை கட்டி தண்ணீரில் போட்டு விட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது. சிறுமுகை போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News