
.குமரி மாவட்டம் புதுக்கடை அருகே முஞ்சிறை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி ஸ்ரீதேவி (46). இவர் அங்கன்வாடி பணியாளர் . இவருக்கு லட்சுமி (22) என்ற மகள் உள்ளார். லட்சுமி அதே பகுதி, மற்றொரு பிரிவை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வின்சிலின் (33) என்பவரை காதலித்துள்ளார். சமீப காலமாக வின்சிலின் நடவடிக்கைகள் பிடிக்காத காரணத்தால் மகளை திருமணம் செய்து கொடுக்க ஸ்ரீதேவி மறுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று ஸ்ரீதேவி வீட்டு காம்பவுண்டில் அத்துமீறி நுழைந்த வின்சிலின் அவரை தாக்கி, பெண்மைக்கு களங்கம் உண்டு பண்ணி, தீ வைத்து கொளுத்தி விடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஶ்ரீதேவி புதுக்கடை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வின்சிலின் மீது வழக்கு பதிவு செய்தனர்.