சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கைது.
மதுரை திருமங்கலம் அருகே நடந்த சாலை மறியலில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டார்.;
மதுரை மாவட்டம் திருமங்கலம் ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டியில் அண்டர் கிரவுண்ட் பாலம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் இன்று (ஜன.30) சாலை மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 4 மணி நேரம் தொடர்ந்த சாலை மறியலில் பங்கேற்க வந்த முன்னாள் அமைச்சர் உதயகுமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். போராட்டம் ஈடுபட்டவர்கள் போலீஸ் வாகனத்தை மறித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.