தனியார் குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்த கிடந்த தந்தை மகள்

தனியார் குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்த கிடந்த தந்தை மகள்;

Update: 2025-01-30 09:29 GMT
திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயில் தனியார் குடியிருப்பில் கடந்த 6 மாதமாக வேலூரை பூர்விகமாக கொண்ட வசித்து வருபவர்கள் சிந்தியா வ/30 தனது தந்தை சாமுவேல் சங்கர் வ/70 இதில் சிந்தியா திருமணமாகி விவாகரத்து பெற்று தந்தையுடன் வசித்து வந்ததாகவும். சிந்தியா தனது தந்தை சாமுவேல் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் மருத்துவம் பார்க்குமாறு இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காஞ்சிபுரம் ஓரிக்கையை சேர்ந்த மருத்துவர் சாமுவேல் எபினேருடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி அதன்மூலம் நட்பு ஏற்பட்டு அவரை தனது தந்தைக்கு மருத்துவம் பார்க்க அடிக்கடி வரவழைத்ததாகவும். மருத்துவர் சாமுவேல் எபினேசர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவர்களுக்கு விரிவுரையாளராக பணியாற்றி வந்ததாகவும். மேலும் மருத்துவர் அறிவுரையின்படி கூடுதல் சிகிச்சை அளிக்க திருமுல்லைவாயில் தனியார் குடியிருப்பில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வீட்டிலேயே வைத்து மருத்துவம் பார்த்து வந்ததாகவும் சாமுவேல் சங்கர்.கடந்த செப்டம்பர் மாதம் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில்.தந்தை உயிரிழந்ததை அறிந்த சிந்தியா மருத்துவர் சாமுவேல் எபினேசரிடம் வாக்குவாதம் ஈடுபட்டு சண்டை போட்டுள்ளார் அப்போது மருத்துவர் சிந்தியாவை வேகமாக கீழே தள்ளி பலமாக தாக்கியதில் தலையில் பலத்த அடிபட்டு சிந்தியாவும் சம்பவத்தன்று இறந்துள்ளார். இறந்து போன இருவரின் சடலங்களை படுக்கை அறையில் வைத்துவிட்டு AC யை ஆன் செய்துவிட்டு மருத்துவர் வீட்டை பூட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் முதல் இன்று வரை இருவரின் உடல்களும் அவரது வீட்டிலேயே இருந்து வந்த நிலையில். வாரம் ஒருமுறை உயிரிழந்த சிந்தியா மற்றும் அவரது தந்தை சாமுவேல் உடல் உள்ள வீட்டிற்கு மருத்துவர் சாமுவேல் எபினேசர் அடிக்கடி வந்து சென்றதாகவும். இந்த நிலையில் உயிரிழந்த முதியவர் சாமுவேலின் தங்கை மருமகன் ஆல்பர்ட் ஜான் என்பவர் தொலைபேசி மூலம் அடிக்கடி தொடர்ந்து தொடர்பு கொண்டநிலையில். போன் எடுத்து யாரும் பேசவில்லை என கூறப்படுகிறது. நேரில் வந்து பார்த்த பொழுது வீடு பூட்டி நிலையில் இருந்ததால் அங்கிருந்து சென்று விட்டதாகவும்.பின்னர் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் குடியிருப்பு சங்க நிர்வாகிகளுக்கு தெரிவித்தனர். இந்த நிலையில்.நேற்று இரவு சாமுவேல் எபினேசர் கைது செய்து பின்னர் காவல் நிலையத்தில்வைத்து நடந்த விசாரணையில்.சம்பவ இடத்திற்கு சென்ற திருமுல்லைவாயல் போலீசார் இருவரது உடலை கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தந்தை மகள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து மருத்துவர் சாமுவேல் எபினேசரிடம் தீவிர விசாரணை வழக்கு பதிவு செய்து. காவல்துறையினர் மருத்துவர் எபினேசர் சாமுவேல். உயிரிழந்த இருவரின் உடலை பதப்படுத்தும் வகையில் மருந்துகள் செலுத்தி வீட்டை பூட்டிவிட்டு குளிர்சாதன பெட்டியை ஆன் செய்து இறந்ததை மறைக்க திட்டம் போட்டாரா என்ற கோணத்திலும் திருமுல்லைவாயில் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News