தாளவாடியில் மாபெரும் இரத்ததான முகாம்
தாளவாடியில் மாபெரும் இரத்ததான முகாம்;
தாளவாடியில் மாபெரும் இரத்ததான முகாம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தாளவாடி வட்டாரத்தைச் சார்ந்த நற்பணி மன்றங்கள் இணைந்து இரத்ததான முகாமை நடத்தினர். இதில் தாளவாடி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், தாளவாடி ஒன்றிய தமிழக வெற்றிக் கழகத்தினர், தாளவாடி ரோட்டரி ஹில்ஸ் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர். இரத்ததானம் செய்த நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. தாளவாடி பகுதியில் இது போன்ற இரத்ததான முகாம்களை மாதம் ஒரு முறை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.