பவானிசாகர் அருகே யானைத் தாக்கி பெண் படுகாயம்
பவானிசாகர் அருகே யானைத் தாக்கி பெண் படுகாயம்;
பவானிசாகர் அருகே யானைத் தாக்கி பெண் படுகாயம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட புதுப்பிக்கடவு, பூதிக்குப்பத்தைச் சேர்ந்தவர் கருப்புசாமி இவரது மனைவி மாரம்மாள் (60), இவர் இன்று பவானிசாகர்க்கு சென்று மளிகை பொருள் வாங்கி கொண்டு வீட்டுக்கு செல்வதற்காக பவானிசாகர் - தெங்குமரடா செல்லும் அரசு பேருந்தில் சென்றுள்ளார். பூதி குப்பம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அது உரைச் சேர்ந்த மணி, குமாரசாமி, தங்கராஜ் ஆகியோருடன் மாரம்மாள் நடந்து சென்றுள்ளார். அப்பொழுது, பூதி குப்பம் பேருந்து நிறுத்தத்திற்கும் பூதி குப்பம் கிராமத்திற்கும் இடையில் வனப்பகுதியில் புதர் மறைவில் மறைவாக நின்று கொண்டு இருந்த ஒற்றை திடீரென நடந்து சென்றவர்களை துரத்தி தாக்கியதில் மாரம்மாள் படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வருகிறது. பவானிசாகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.