லாரி மோதியதில் பள்ளி மாணவன் உள்ளிட்ட இரண்டு பேர் உயிரிழப்பு
லாரி மோதியதில் பள்ளி மாணவன் உள்ளிட்ட இரண்டு பேர் உயிரிழப்பு;
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே பட்டம் மந்திரி- வல்லூர் ஜங்ஷனில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் மீது டிப்பர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்தில் ஜோதி என்பவரும் மருத்துவமனையில் 14 வயது அரசு பள்ளி மாணவர் விமல் என்பவர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மீஞ்சூர் அருகே உள்ள ஊரணம்பேடு கிராமத்தில் இருந்து மீஞ்சூர் வழியாக வில்லிவாக்கத்தில் உள்ள அவரது உறவினர் இல்லத்திற்கு மின்சார வாரிய ஊழியரான ஜோதி என்பவர் செல்லும்போது உடன் அவரது சகோதரி மகன் விமல்.வ/14 திருவெள்ளைவாயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் அவரை அழைத்து சென்று கொண்டிருந்தார். பட்ட மந்திரி- வல்லூர் ஜங்ஷனில் செல்லும்போது பின்பக்கமாக மீஞ்சூரில் இருந்து வடசென்னை அனல் மின் நிலையம் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மோதி கீழே விழுந்ததில் இருசக்கர வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார்.அவரின் உடலை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னால் அமர்ந்து சென்ற விமலை மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையம் அழைத்து வந்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவரும் இறந்துள்ளார். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை செய்து வருகின்றனர் மேலும் விபத்தை ஏற்படுத்தி லாரி ஓட்டுநர் திருவண்ணாமலை மாவட்டம் ஆனாநந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் என்பவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது