சமுதாயக்கூடம் கட்ட அடிக்கல் : தொடங்கி வைத்த அமைச்சர்

8 கோடியே 65 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய சமுதாயக்கூடம் கட்ட அடிக்கல் நடும் பூமி பூஜை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்;

Update: 2025-02-03 16:17 GMT
8 கோடியே 65 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய சமுதாயக்கூடம் கட்ட அடிக்கல் நடும் பூமி பூஜை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார் பூமி பூஜை விழாவில் பங்கேற்ற பொதுமக்களுக்கு தலா 100 ரூபாய் வழங்கிய மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 8.கோடியே 65 லட்சம் மதிப்பில் விளங்காடுப்பாக்கம் ஊராட்சியில் புதிய சமுதாயக்கூடம் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நடும் விழா இன்று நடைபெற்று இதில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர் அப்போது அமைச்சர் சேகர் பாபு நாளையே கட்டுமான பணிகளை தொடங்கி விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகளை அறிவுறுத்தினார் பின்னர் நிகழ்ச்சி முடிந்து அமைச்சர் சேகர்பாபு காரில் சென்ற பின்னர் அங்கிருந்த மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் பூமி பூஜை விழாவில் பங்கேற்க வந்த பொது மக்களுக்கு 17 ஆயிரம் ரூபாய் கொடுத்து அனைவரும் 100 ரூபாய் எடுத்து கொள்ளுங்கள் எனக் கூறி சென்றது குறிப்பிடதக்கது.

Similar News