வல்லத்துறை: பள்ளியில் காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு
வல்லத்துறை பள்ளியில் காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது;
கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் வல்லத்துறை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் தீமைகள் குறித்தும், போக்குவரத்து விதிமுறைகள், சைபர் குற்றங்கள் தடுப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதுமட்டுமல்லாமல் கடலூர் மாவட்ட காவல் துறையினர் சார்பில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.