விழுப்புரம் மாவட்டத்தில் மின் நுகர்வோர் கூட்டம் அறிவிப்பு

ஒவ்வொரு கோட்டம் வாரியாக தேதி அறிவிப்பு;

Update: 2025-02-04 05:19 GMT
விழுப்புரம் கோட்ட அளவிலான மாதாந்திர மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் அந்தந்த கோட்ட அலுவலகங்களில் மாதந்தோறும் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தலை மையில் நடைபெறுகிறது. அந்த வகையில் இம்மாதம் விழுப்புரம் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் இன்று (செவ்வாய்க் கிழமை) காலை 11 மணியள வில் அங்குள்ள செயற்பொறியாளர் அலுவலகத்திலும்,கண்டமங்கலம் கோட்ட குறைகேட்பு கூட்டம் 12-ந் தேதி காலை 11 மணிக்கு அங்குள்ள செயற்பொறியாளர் அலுவலகத்திலும் செஞ்சி கோட்ட குறைகேட்பு கூட்டம் 18-ந் தேதி காலை 11 மணிக்கு அங்குள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தி லும், திண்டிவனம் கோட்ட குறைகேட்பு கூட்டம் 25-ந் தேதி காலை 11 மணிக்கு அங்குள்ள செயற்பொறியாளர் அலுவலகத்திலும் நடைபெற உள்ளது. எனவே, இக்கூட்டத் தில் பொதுமக்கள் நேரில் கலந்துகொண்டு தங்களின் குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து பயன்பெறலாம். இந்த தக வலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News