மதுரையில் இருந்து போடிநாயக்கனூர் வரை மின்சார ரயில் போக்குவரத்து தொடங்கியது

மின்சார ரயில்;

Update: 2025-02-04 08:19 GMT
மதுரையில் இருந்து போடிநாயக்கனூர் வரை தினசரி வந்து செல்லும் பேசஞ்சர் ரயில் மற்றும் சென்னையில் இருந்து வாரத்திற்கு மூன்று நாள் போடிநாயக்கனூருக்கு வந்து செல்லும் அதிவிரைவு ரயில் வண்டி இரண்டுமே ஒரே நாளில் மின்சார ரயிலாக மாற்றப்பட்டு போக்குவரத்து தொடங்கியது. மின்சார ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டதால் ரயில்வே இருப்புப் பாதைகளில் உள்ள மின்சார கம்பங்களில் 25,000 ஓல்ட் மின்சாரம் செயல் திறன் நடைமுறையில் உள்ளதால் மின் கம்பிகளுக்கு இடையே இருப்புப் பாதைகளில் அத்துமீறி நுழைவோர்கள் மற்றும் சுற்றி திரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே காவல்துறையினர் எச்சரிக்கை. இந்நிலையில் சென்னையில் இருந்து வரும் வரையில் மதுரை மார்க்கம் வழியாக போடிநாயக்கனூர் வந்துடுகிறது. சென்னையில் இருந்து மதுரை வரை மின்சார ரயிலாக வரக்கூடிய அதி விரைவு ரயில் வண்டி மதுரையில் இருந்து போடிநாயக்கனூர் வரை டீசல் இன்ஜின் ஆக மாற்றப்பட்டு வருகிறது. இதனால் சுமார் 40 நிமிடம் காலதாமதம் ஏற்படுகிறது. இதனை சீர் செய்யும் வகையில் போடிநாயக்கனூரில் இருந்து மதுரை வரை மின்சார அறையில் போக்குவரத்து தொடங்குவதற்கான திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு பணிகள் நிறைவு கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் விரைவில் மதுரையில் இருந்து போடிநாயக்கனூருக்கு மின்சார ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கு உண்டான பணிகள் சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய கட்டமாக கடந்த வியாழக்கிழமை போடிநாயக்கனூரில் இருந்து மதுரை வரை உள்ள மின்சார வழி தடக் கம்பிகளில் மின்சார ரயில் போக்குவரத்திற்கு மின் தொடர்பு ஏற்படுத்தித் தரும் பேன்டோகிராப் என்றழைக்கப்படக்கூடிய மின்தட இணைப்பு உபகரணம் பொருத்தப்பட்ட மின்தட இணைப்பு உபகரண ஆய்வு ரயில் சோதனை ஓட்டம் (OHE INSPECTION CAR )நடைபெற்றது. இன்று முதன்முறையாக மின்சார ரயில் போக்குவரத்து தொடங்கியதை முன்னிட்டு இருப்புப் பாதைகளில் உள்ள மின்சார தடங்களில் 25,000 ஓல்ட் மின்சாரம் பயன்படுத்தப்படுவதால் மின்சார தடங்கள் உள்ள இருப்புப் பாதைகளில் அத்துமீறி உள்ளே நுழைபவர்கள் மற்றும் சுற்றி திரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதைகளை கடப்பவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே போலீசார் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளனர் மேலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Similar News