திருச்சி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெயிண்டர் கத்தியால் குத்திக் கொலை
திருச்சி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெயிண்டர் கத்தியால் குத்திக் கொலை செய் யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்;
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் பிரபாகரன் (வயது 39). பெயிண்டரான இவர் நேற்று காலையில் மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் வேங்கூர் பகுதியில் தலை, நெஞ்சு, முதுகு உள்ளிட்ட பல இடங்களில் கத்திக்குத்து காயங்களுடன் மோட்டார் சைக்கிள் மீது பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் அங்கிருந்த தடயங்களை சேகரித்துக்கொண்ட னர். மோப்பநாய் நிலா சம்பவ இடத்தை மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் சென்று நின்று விட்டது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. பின்னர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம் பவம் தொடர்பாக திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனினும் கொலையாளிகள் பிடிபட்டால் தான் இக்கொலைக்கான முழுகாரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.