வடலூர்: தற்காலிக கடை வைக்க அனுமதி இல்லை
வடலூர் சத்திய ஞான சபையில் தற்காலிக கடை வைக்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.;
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் தைப்பூச விழாவினை முன்னிட்டு தற்காலிக கடைகளுக்கு எவ்வித அனுமதியும் அளிக்கவில்லை. மீறி தற்காலிக கடைகள் அமைக்க இடம் பிடித்தாலோ அல்லது பொருட்களை இறக்கி வைத்தாலோ உடனடியாக பொருட்கள் பறிமுதல் செய்வதோடு சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் சார்பில் அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது.