தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநாடு
மாநாடு;
2026 ஆம் ஆண்டு யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை முடிவு செய்யும் மாநாடாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநாடு அமையும் என்றும் கூட்டணி குறித்து சில அரசியல் கட்சிகள் தங்களை அணுகி வருவதாகவும் தேனியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா பேட்டி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 42 வது மாநில மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு வணிகர்களின் ஆலோசனை கூட்டம் தேனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆகியோரிடம் கலந்துரையாடினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விக்கிரம ராஜா தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 42 வது மாநில மாநாடு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தக்கத்தில் நடைபெற உள்ளது அதற்கான ஆலோசனை கூட்டம் இன்று தேனியில் நடைபெற்றது மாநாட்டிற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் வணிகர்களின் பிரச்சினைகள் குறித்தும் வாடகை கட்டிடங்களுக்கு வரி, தொழில் வரி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது என்று தெரிவித்தார் 2026 ஆம் ஆண்டு யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை தீர்மானிக்கும் மாநாடாக இந்த மாநாடு அமையும் கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும் பல்வேறு அரசியல் கட்சியினர் எங்களுடன் கூட்டணி குறித்து அணுகி வருகிறார்கள் நாங்கள் அரசியல் அமைப்பில்லை அரசு சார்ந்த அமைப்பு ஆட்சியில் பங்கு வேண்டாம் கூட்டணியில் இடம் வேண்டாம் புதிதாக கட்சி தொடங்குபவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள் நாங்கள் ஆட்சியில் பங்கு கேட்பவர்கள் அல்ல அதிக சலுகைகள் கேட்பவர்கள் குட்கா, புகையிலை நாடு முழுவதும் உள்ள பிரச்சினை இதை ஒட்டுமொத்தமாக தடை செய்தால் மட்டுமே ஒழிக்க முடியும் புகையிலை உற்பத்தி தமிழ்நாட்டில் நடைபெறுகிறது அதனை வரி செலுத்தி வாங்கி விற்பனை செய்கின்ற வியாபாரிகள் மீது அரசு வழக்கு பதிவு செய்கிறது உற்பத்தி செய்ய அனுமதி கொடுக்கும் அரசு அதை விற்பனை செய்வது குற்றம் எனக் கூறுகிறது என தெரிவித்தார்