கடலூர்: பந்தல் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு
கடலூரில் பந்தல் அமைக்கும் பணியை திமுக செயலாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
கடலூர் மாவட்டத்திற்கு, பிப்ரவரி 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் தமிழக முதல்வர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தர உள்ளார். இதனை ஒட்டி மஞ்சக்குப்பம் மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பந்தல் அமைக்கும் பணியினை திராவிட முன்னேற்றக் கழக கடலூர் மாநகர செயலாளர் கே.எஸ். ராஜா மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.