பணியின் போது நெஞ்சு வலி ஏற்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உயிரிழந்த சோகம்

அதிநவீன சோதனைச் சாவடியில் பணியின் போது நெஞ்சு வலி ஏற்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உயிரிழந்த சோகம்;

Update: 2025-02-07 05:23 GMT
எளாவூர் அதிநவீன சோதனைச் சாவடியில் பணியின் போது நெஞ்சு வலி ஏற்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உயிரிழந்த சோகம். திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி சென்னீர்குப்பம் பகுதியில் வசித்தவர் செந்தில்குமரன் 54 கும்மிடிப்பூண்டி அடுத்து எளாவூரில் உள்ள மாநில எல்லையோர ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் வட்டார போக்குவரத்து அலுவலராக வேலை பார்த்து வந்தார் பணியில் இருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பொன்னேரி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Similar News