பழமை வாய்ந்த அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஒற்றைக்காலில் நின்று முருகப்பெருமானை தரிசித்த சேவலின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல்

வைரல் வீடியோ;

Update: 2025-02-07 12:57 GMT
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் சுமார் நூறாண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் நேற்று தை மாத கிருத்திகை தினத்தை முன்னிட்டு மூலவர் சன்னதியில் அமர்ந்தருளும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்து அமர்ந்திருந்தனர் அப்போது கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற நேர்த்திக்கடனாக சேவலை வழங்குவது வழக்கம் அப்படி கோயிலுக்கு நேர்ந்து விட்ட சேவல் செய்த செயல் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது பக்தர்கள் யாரும் எதிர்பாராத வகையில் முருகன் சன்னிதானத்திற்கு எதிரே அமைந்துள்ள கொடி மரத்தின் மீது ஏறி நின்று முருகப்பெருமானுக்கு நடைபெற்ற தரிசனத்தை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டு முருகரை தரிசனம் செய்வது போன்று ஒற்றை காலை தூக்கி நின்ற செயல் அங்கிருந்த பக்தர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது இதனை எடுத்து அங்கு கூடியிருந்த பக்தர்கள் அரோகரா அரோகரா என கோஷங்களை எழுப்பி முருகப்பெருமானை பக்தி பரவசத்துடன் வழிபடத் தொடங்கினர் இந்த காட்சி அங்கு வருகை தந்த மக்கள் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பரவி வருகிறது

Similar News