தை மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு

108 திருவிளக்கு பூஜை;

Update: 2025-02-08 05:35 GMT
நாகையில், புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில், தை மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு, நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, 108 சுமங்கலி பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. குத்து விளக்கை அம்பாளாக பாவித்து, குங்கும அர்ச்சனை செய்து திருவிளக்கிற்கு 5 தீபங்கள் ஏற்றி அர்ச்சனை செய்து, தீப தூபம் ஏற்றி வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து, மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், நாகை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News