தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம் உப்புக் கோட்டை ஊராட்சியில் வரதராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலை 10 சமுதாயத்தை சேர்ந்தோர் கும்பிட்டு வருகின்றனர். இந்த கோவிலில் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜையும் சித்திரைமாதம் 3 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம் இந்தநிலையில் கடந்த ஜீன்மாதம் கும்பாபிஷேகம் செய்வதற்காக பாலாயுத பூஜை நடைபெற்று கும்பாபிஷேக திருப்பணி நடைபெற்று வந்தது இந்த நிலையில் கோவிலில் வருகிற பிப்ரவரி 10ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருந்த நிலையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோவில் எடுக்க முயற்சி செய்தது இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் விரதத்தை கைவிட்டனர். இந்நிலையில் தனிபட்ட ஒரு குடும்பத்தை சேர்ந்தவர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று கும்பாபிஷேகம் நடைபெற இருந்தது இதனை எதிர்த்து கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டு பொதுமக்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.