சோழமண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாட்டையொட்டி ஜெயங்கொண்டத்தில் வன்னியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்.
கும்பகோணத்தில் பிப்ரவரி 23-ந் தேதி நடைபெற உள்ள சோழமண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாட்டையொட்டி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில் வன்னியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.;
ஜெயங்கொண்டம், பிப். 9- கும்பகோணத்தில் பிப்ரவரி 23-ந் தேதி நடைபெற உள்ள சோழமண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாட்டையொட்டி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில் வன்னியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட செயலாளர் தமிழ்மறவன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பூ.தா.அருள்மொழி, மாநில உழவர் பேரியக்க தலைவர் கோ ஆலயமணி, மாநில வன்னியர் சங்க செயலாளர் க.வைத்தி, மாநில அமைப்பு தலைவர் டிஎம்டி.திருமாவளவன், மாநில மாணவர் சங்க செயலாளர் ஆளவந்தார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில் கும்பகோணத்தில் நடைபெற உள்ள மாநாட்டில் அரியலூர் மாவட்டம் முழுவதும் உள்ள வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க. கட்சியின் ,முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் பரசுராமன் நன்றி கூறினார்.