தை மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு

பால் குட ஊர்வலம்;

Update: 2025-02-08 08:01 GMT
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த வலிவலத்தில், அருள்மிகு இருதய கமலநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. ‌இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான இக்கோவிலில், மழையொண்கண்ணி உடனுறை மனத்துணைநாதர் அருள் பாலித்து வருகின்றனர். இக்கோயிலில், தை மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடைபெற்றது. வலிவலம் இரட்டை விநாயகர் ஆலயத்தில் இருந்து தொடங்கிய பால் குட ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆலயத்தை வந்தடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பக்தர்கள் கொண்டு வந்த பால் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் வண்ண மலர்களால் அலங்கரித்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar News