தேனியில் பாஜக சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

கொண்டாட்டம்;

Update: 2025-02-08 08:13 GMT
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 70 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட டெல்லியில் பெரும்பான்மைக்கு 36 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் 12 மணி நிலவரத்தின் படி பாஜக 48 தொகுதிகளுடன் முன்னிலையில் இருக்கின்றது ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி 22 தொகுதிகளுடன் இரண்டாம் இடத்திலும் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறாமல் பின்னடைவை சந்தித்துள்ளது டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதும் பாஜகவின் நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக தேனி நேரு சிலை பகுதியில் தேனி மாவட்ட பாஜக தலைவர் ராஜபாண்டி தலைமையில் தேனி நகரத் தலைவர் ரவிக்குமார் முன்னிலையில் ஏராளமான பாஜகவினர் பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்

Similar News