இலுப்பையூர் அரசுப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

இலுப்பையூர் அரசுப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடைபெற்றது,;

Update: 2025-02-08 12:48 GMT
அரியலூர், பிப்.8- அரியலூர் அடுத்த இலுப்பையூர் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல்  விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயராணி தலைமை வகித்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். ஸ்வீட் அறக்கட்டளை நிறுவனர் இளவரசன் கலந்து கொண்டு நெகிழிப்  பொருள்களின் தீமைகள் குறித்து விளக்கினார். நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மாணவ, மாணவிகளிடையே ஓவியம், கட்டுரை, பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு,  அதில் வெற்றிப் பெற்றப் பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும், கலந்து கொண்டவர்களுக்கு இலவச துணிப் பைகளும் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மாயூபி, தீபக், பிரிட்டோ ஆல்பர்ட் அருள்ராஜ், மதியழகன், கஸ்தூரி ஆகியோர் செய்திருந்தனர்.

Similar News