உலக தாய்மொழி தமிழ் விழா நிகழ்ச்சி
குளித்தலை தமிழ்ச் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு பரிசளிப்பு;
கரூர் மாவட்டம் குளித்தலை கிராமிய கூட்ட அரங்கில் குளித்தலை தமிழ்ச் சங்கம் சார்பில் உலகத் தாய்மொழி தமிழ் விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிறுவனத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் மணிகண்டன் வரவேற்பு நிகழ்த்தினார். மதிமுக மாநில மாணவரணி செயலாளர் பால. சசிகுமார் கலந்து கொண்டு தமிழும் தமிழரும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். திருக்குறள் ஒப்புவித்தல், பல்வேறு தலைப்புகளில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ் ஆர்வலர்கள் தமிழ் சங்க அமைச்சர்கள், புரவலர்கள், சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் பள்ளி முதல்வர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.