திருமானூரில் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் நெல் கொள்முதல் செய்யும் ஒன்றிய அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருமானூரில் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் நெல் கொள்முதல் செய்யும் ஒன்றிய அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
அரியலூர், பிப்.10- அரியலூர் மாவட்டம் திருமானூரில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பாக விவசாயிகளின் நெல்களை நேரடி கொள்முதல் நினையங்கள் மூலமாக கொள்முதல் செய்வதை தடுத்து நிறுத்தி தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் நெல் கொள்முதல் செய்திட வேண்டும் என்ற ஒன்றிய மோடி அரசின் உத்தரவை ரத்து செய்திட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் மணியன் தலைமை வகித்தார். இதில் சங்க மாவட்ட செயலாளர் மணிவேல், ஒன்றிய செயலாளர் வரப்பிரசாதம், ஒன்றிய தலைவர் வைத்திலிங்கம், தமிழ்நாடு கரும்பு சங்க மாவட்ட செயலாளர் ஜெகநாதன் மாவட்ட தலைவர் கரும்பாயிரம் ஒன்றிய பொருளாளர் காமராஜ், சிபிஎம் ஒன்றிய செயலாளர் சாமிதுரை, சமூக ஆர்வலர் பாளை திருநாவுக்கரசு, ஒன்றிய குழு புனிதன், சிறுபான்மை நலக்குழு மாவட்ட தலைவர் சவுரிராஜன், மாதர்சங்க ஒன்றிய செயலாளர் கலைமணி மற்றும் ஞானபிரகாசம் பழனிச்சாமி சுந்தரமூர்த்தி தங்கமலை, நாகராஜ் மற்றும் சங்க தலைவர் ஆண்டவர் என பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் ஏரி, குளங்கள் ஆழப்படுத்தி பாசன வசதி ஏற்படுத்த வேண்டும் மேலும் தொடர் மழையால் பாதித்த விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு கொடுக்கனும் கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டனும். அதே போல ஒன்றிய அரசு ஒன்றிய பட்ஜெட்டில் உரமானியம் ரத்து , உணவு மானியம் குறைப்பு, நூறு நாள் வேலைக்கு போதிய நிதி ஒதுக்காதது கண்டித்து ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு விவசாய சங்கம் நடத்தினர்.