உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மரியாதை.
உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மரியாதை செலுத்தினர்.;
அரியலூர், பிப்.10- அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மலர் வளையும் வைத்து சனிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது. உடையார்பாளையம் அருகேயுள்ள கோவிந்தபுத்தூர், மதுரா காசாங்கோட்டை கிராமம், நாச்சியார் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் துரைராஜ் மகன் பசுமைக்குமார்(43). கடந்த 4 ஆம் தேதி இவர், மரத்தில் இருந்து தவறி விழுந்ததில் தலைமையில் அடிப்பட்டு, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு 7 ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், மூளைச் சாவு ஏற்பட்ட காரணத்தினால் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்திட அவரது குடும்ப உறுப்பினர்களால் முடிவு செய்யப்பட்டு உடல் உறுப்புகள் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தானம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது உடல் காசாங்கோட்டைக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அவரது உடலுக்கு உடையார்பாளையம் கோடாட்டசியர் ஷீஜா மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் மலர் வளையம் வைத்து, அரசு சார்பில் மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வின்போது சுத்தமல்லி பகுதி வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உடனிருந்தனர். :