அரியலூரில் ஆராய்ச்சி மேற்கொண்ட பேராசிரியர்கள்

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய குழுவினர் அரியலூரில் தொல்லியல் மற்றும் எச்ச படிமங்களை ஆய்வு மேற்கொண்டனர்.;

Update: 2025-02-09 15:18 GMT
அரியலூர், பிப்.10 - சென்னை வரலாற்று ஆய்வாளர் சங்கத்தினர், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலகைக் கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய குழுவினர், அரியலூரில் தொல்லியல் மற்றும் எச்ச படிமங்களை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர்.களப் பயணமாக வந்திருந்த அவர்கள், கீழப்பழுவூரிலுள்ள புதை உயிரிப் படிம அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர். பின்னர் அரியலூரிலுள்ள பாழ்நிலப் பகுதிகளில் ஆய்வு செய்த போது, அவர்கள் எச்ச படிமங்களை கண்டுப்பிடித்தனர். இதுகுறித்து அவர்களிடம், அரியலூர் அயன்தத்தனூர்  அரசு உயர்நிலைப் பள்ளி வரலாற்றுத்  துறை ஆசிரியர் அன்பு, கடல் கனிம மண்பாறைகள், மணல் கடல் வாழ் உயிரிகளின் எச்சம், பாசில் போன்ற தொல்லுயிரிகள் படிமங்கள் அனைத்தும் உள்ள பகுதியாக அரியலூர் திகழ்கிறது. கிரிட்டேசியஸ் யுகத்தில் அதாவது 146 மில்லியமன் ஆண்டுகளுக்கு முன்பு அரியலூர் மாவட்டத்தின் பெரும் பகுதிகள் கடலுக்குள் மூழ்கியிருந்தது என்று தெரிவித்தார். இதையடுத்து விளக்கங்களை கேட்டறிந்த பேராசிரியர்கள் குழுவினர், அரியலூர் வரலாற்றுக் குறித்து மற்ற மாணவர்களிடமும், அனைத்து தரப்பு மக்களிடமும் எடுத்துக் கூறுவதாக தெரிவித்தனர். .

Similar News