ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்த மோடி அரசை கண்டித்து மாவட்ட திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம்
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்த மோடி அரசை கண்டித்து மாவட்ட திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.;
அரியலூர், பிப்.10- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் நகரில், அரியலூர் மாவட்ட திமுக சார்பில், ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்த மோடி அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட திமுக செயலாளர் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமை வகித்தார். மாவட்ட கழக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏ திமுக ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் வி.பி.இராஜன் , திமுக இலக்கிய அணி துணைத் தலைவர் முன்னாள் எம்எல்ஏ கவிதை பித்தன், , சட்டதிட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர் ,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் , தலைமை கழக பேச்சாளர்கள் குடந்தை இராமகிருஷ்ணன் இளஞ்செழியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் தலைமை கழக செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி மேலிட மேற்பார்வையாளர் கலா சுந்தரமூர்த்தி மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய,நகர,பேரூர்,கிளை கழக நிர்வாகிகள், அனைத்து அணி நிர்வாகிகள், திமுக தோழர்கள்,பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.