விருத்தாசலம் - கடலூர் வாகன ஓட்டிகள் கவனத்திற்கு நாளை...
விருத்தாசலம் - கடலூர் சாலை போக்குவரத்து நாளை மாற்றப்பட உள்ளது.;
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் நாளை 11 ஆம் தேதி தைப்பூச ஜோதி தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விருத்தாசலத்திலிருந்து கடலூர் செல்லும் வாகனங்கள் மந்தாரக்குப்பம், நெய்வேலி டவுன்ஷிப், ஆர்ச்கேட், சத்திரம், குறிஞ்சிப்பாடி வழியாக செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.