வடக்குத்து: பசுமை தாயகம் சார்பில் அன்னதானம் வழங்குதல்
வடக்குத்து பகுதியில் பசுமை தாயகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.;
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வடக்குத்து ஊராட்சி ஜெ&ஜெ என்டர்பிரைசஸ் அருகில் வடக்குத்து ரோட்டரி சங்கம் மற்றும் பசுமை தாயகம் சார்பில் 5000-க்கும் மேற்பட்ட வள்ளல் பெருமான் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாமக நிர்வாகிகள், பசுமைத்தாயகம் நிர்வாகிகள் மற்றும் வடக்குத்து சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சேவை ஆற்றினர்.