உளுந்தூர்பேட்டை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு. உளுந்தூர்பேட்டை அஜீஸ் நகர் அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள குளத்தில் தாய் மகன் சடலமாக குளத்தில் மிதந்து கிடந்த நிலையில் கணவர் அருகிலுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய வார று தற்கொலை செய்து கொண்டனர். முத்து என்பவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது மனைவி தேவி மற்றும் மகன் பிரவீன் குமார் ஆகிய இருவரும் குளத்தில் சடலமாக மிதந்துள்ளனர். சம்பவம் குறித்து எடைக்கல் போலீசார் விசாரணை.