ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் கேட்ட மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கலெக்டர். மிரட்டிய பஞ்சாயத்து செயலாளரால் பரபரப்பு

ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் கேட்ட மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கலெக்டர். மிரட்டிய பஞ்சாயத்து செயலாளரால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2025-02-12 10:42 GMT
அரியலூர், பிப்.12- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பெரியவளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சியிலும், நகராட்சியிலும் பலமுறை மனு அளித்தம் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இன்று பெரியவளையம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மனு அளித்த பொதுமக்களை அதிகாரிகள் அலட்சியப்படுத்தியது மட்டுமல்லாமல் மாவட்ட ஆட்சியர் மனு மீது நடவடிக்கை எடுக்காமல், அதிகாரி அவர்தான் அவரை கேளுங்கள் என நழுவி விலகிக் சென்றது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . மேலும் பஞ்சாயத்து செயலாளர் அழகேசன் என்பவர் மனு கொடுத்த மக்களை பொதுவெளியில் மிரட்டியது மேலும் பொதுமக்களிடையே அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரியவளையம் அண்ணா நகர் ஒரு பகுதி ஜெயங்கொண்டம் நகராட்சியிலும் மற்றொரு பகுதி ஊராட்சியிலும் வருவது குறிப்பிடத்தக்கது

Similar News