மத்தியப் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவம் குறித்த கருத்தரங்கம்.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அகத்தியர் மற்றும் சித்த மருத்துவம் குறித்த கருத்தரங்கத்தைத் துணைவேந்தர் பேராசிரியர் மு. கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.;

Update: 2025-02-12 16:51 GMT
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் அகத்தியர் மற்றும் சித்த மருத்துவம் குறித்த கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது . தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் காசித் தமிழ்ச் சங்கம் 3 ன் ஒரு பகுதியாகத் தமிழ் துறை மற்றும் வரலாற்றுத் துறை இணைந்து அகத்தியர் மற்றும் சித்த மருத்துவம் என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கத்தை நடத்தின. இக்கருத்தரங்கத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றியத் துணைவேந்தர் பேராசிரியர் மு. கிருஷ்ணன் தெரிவித்ததாவது, பாரத தேசத்தில் சித்தா ,ஆயுர்வேத மற்றும் யுனானி மருத்துவ முறைகளில் பல நோய்களுக்கான பல்வேறு சிகிச்சைகள் ஓலைச்சுவடிகள் மூலம் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. இன்னும் பல்வேறு சிகிச்சை முறைகள் சரியாக ஆவணப்படுத்தப்படாததால் மற்றவர்கள் இந்த சிகிச்சை முறைகளை உரிமைக் கொண்டாட வாய்ப்பாக அமைந்துள்ளது .நமது பாரம்பரிய உணவு வகைகளில் மருத்துவக் குணமும் உண்டு. அதனால் தான் உணவே மருந்து என்று கூறப்படுகிறது எனத் தெரிவித்தார். பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி உடற்கூறியல் துறை பேராசிரியர் வெங்கடப்பன் சித்த மருத்துவத்திற்கு அகத்தியர் எவ்வாறு பெரும் பங்காற்றார் என்பது குறித்து உரையாற்றினார். கருத்தரங்கத்தில் பல்கலைக்கழகப் பதிவாளர் இரா.திருமுருகன், பேராசிரியர்கள் சீனிவாசன், ரவி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ் துறைப் பேராசிரியர் ரமேஷ் மற்றும் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் மாவேலிராஜன் ஆகியோர் இணைந்து கருத்தரங்கத்தை ஒருங்கிணைத்தனர்.

Similar News