திமுக இலக்கிய அணி சார்பில் தெருமுனை கூட்டம்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்ட திமுக இலக்கிய அணி சார்பில் தெருமுனைக் கூட்டங்கள் கொல்லாபுரம் மற்றும் கொல்லுமாங்குடியில் இன்று நடைபெற்றது .;
திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான மறைந்த கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு ,தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் மற்றும் திமுக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் திமுகவின் திருவாரூர் மாவட்ட இலக்கிய அணி சார்பில் மாவட்டம் முழுவதும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக திமுக நன்னிலம் வடக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.எம். செல்வராஜ் தலைமையில், கொல்லுமாங்குடி பேருந்து நிலையம் அருகேயும், கொல்லாபுரம் கடைத்தெருப் பகுதியிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றது . நிகழ்ச்சியில் திமுக இலக்கிய அணி மாநில துணைச் செயலர் ஆடுதுறை மு.உத்திராபதி, தலைமைக் கழகப் பேச்சாளர் சோம. இளங்கோவன், இலக்கிய அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் தங்க. குணசேகரன் , ஜாகிர் உசேன், பால.முத்து உள்ளிட்ட நிர்வாகிகள் திமுகவின் சாதனைகளை விளக்கிப் பேசினர்.