தேமுதிக கொடிநாள் கொண்டாட்டம்

அரியலூரில் தேமுதிக கொடிநாள் கொண்டாடப்பட்டது.;

Update: 2025-02-12 17:49 GMT
அரியலூர்,பிப்.12- தேமுதிக கொடி அறிவிக்கப்பட்ட நாளையொட்டி, அரியலூர் மாவட்டத்தில், அக்கட்சியினர் அனைத்து கிராமங்களிலும் கொடியை ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி புதன்கிழமை கொண்டாடினர். அரியலூரிலுள்ள அக்கட்சி அலுவலகம் முன், தேமுதிக கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுககு இனிப்புகள வழங்கிய அக்கட்சியின் மாவட்டச் செயலர் இராம.ஜெயவேல், தொடர்ந்து பேருந்து நிலையம், சக்திவிநாயகர் கோயில், பெரியார் நகர், கயர்லாபாத், க.பொய்யூர், கடுகூர், மணக்குடி, உடையவர்தீயனூர், அம்பலவர் கட்டளை, விக்கிரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கட்சி கொடியை ஏற்றி வைத்து, விஜயகாந்து படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அனைத்து பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News