ஆண்டி மடத்தில் கார் தீபிடித்து எரிந்து ஹோட்டல் உரிமையாளர் சம்பவ இடத்திலேயே பலி

ஆண்டி மடத்தில் கார் தீபிடித்து எரிந்து ஹோட்டல் உரிமையாளர் சம்பவ இடத்திலேயே பலியானார்.;

Update: 2025-02-13 03:24 GMT
அரியலூர் பிப்.13- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் காலையில் கார் ஸ்டார்ட் செய்து வரும் போது தீப்பிடித்து எரிந்து ஹோட்டல் உரிமையாளர் பலியானார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த லட்சுமணன் மகன் அன்பழகன் (67). இவர் ஆண்டிமடம் மற்றும் சின்ன வளையம் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் தற்பொழுது இவர் ஆண்டிமடத்தில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல் அருகே உள்ள ஆண்டிமடம் கடையை திறப்பதற்கு அவருடைய காரில் ஏறி வந்து கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. கவனிக்காமல் சென்றபோது காருக்குள் புகை மண்டலம் ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார். இதனால் சாலையின் நடுவே சென்டர் மீடியினில் இடித்து நின்றுவிட்டது. வெளியில் வருவதற்கு முயற்சி செய்தும் முடியாமல் பின்பு சாலையின் ஓரம் இருந்தவர்கள் கார் கண்ணாடியை உடைத்து அவரை வெளியே எடுக்க முயற்சித்தனர். ஆனால் அதற்குள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரும் முழுவதுமாக எரிந்து விட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியது

Similar News